கட்டாயக் காதலை மறுக்க பெண்ணுக்கு உரிமை இல்லையா?


வினோதினி, சுவாதி, நவீனா, சோனாலி, பிரான்சினா, புஷ்பலதா, மோனிஷா, தன்யா, சோனியா, யமுனா, சித்ராதேவி, இந்துஜா வரிசையில் இப்போது அஸ்வினி. காதல் என்ற பெயரில் பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டிருக்கிறார் அஸ்வினி. இத்தகைய கொடூரங்களுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது? தமிழகப் பெண்கள் பேசுகிறார்கள்...

பிந்து பாலகிருஷ்ணன் (வழக்கறிஞர்), கோவை

ஓர் இளைஞன் அறிமுகமாகையில், அவர் யார், அவரது குடும்பப் பின்னணி என்ன என்பதுகூடத் தெரியாமல் பெண்கள் பழகுவதுதான் பிரச்சினையின் தொடக்கப் புள்ளி. அவர்கள் தவறான நபர்கள், தப்பாக நடக்க முயற்சிக்கிறார்கள், கொலை பாதகம் செய்யக்கூட துணிந்தவர்கள் என்று தெரியவந்த பிறகு சிலர் தாங்களாகவே விலகிவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவ்வளவு எளிமையாகச் சாத்தியமாவதில்லை என்பதையே அஸ்வினி சம்பவம் காட்டுகிறது. பெண் பிள்ளைகள் பெற்றோரிடம் தயக்கமின்றி முதலில் பேச வேண்டும். தொல்லையாக உணர்ந்தால் காவல் துறையை உடனடியாக அணுக வேண்டும்.

x