சத்யராஜ் - காளி வெங்கட் நடிக்கும் ‘மெட்ராஸ் மேட்னி’


சத்யராஜ் - காளி வெங்கட் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படத்துக்கு ‘மெட்ராஸ் மேட்னி' என தலைப்பு வைத்துள்ளனர்.

கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள இதில், ரோஷினி ஹரிப்பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தோக், சுனில்
சுகதா, சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சத்யராஜ், அறிவியல் புனைவு எழுத்தாளராகத் தோன்றுகிறார். ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவுசெய்திருக்கும் இந்த திரைப்படத்துக்கு கே.சி.பாலஸ்ரங்கன் இசையமைத்துள்ளார். மெட்ராஸ்மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளஇந்தப் படத்தை ட்ரீம் வாரியர்பிக்சர்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்தப்படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக் குழு அறிவித்துள்ளது.

x