ஆக.14-ல் வெளியாகிறது 'கூலி' - குஷியில் ரஜினி ரசிகர்கள்!


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘கூலி’. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் சாகிர் என பலர் நடித்துள்ளனர்.

இந்தி நடிகர் ஆமிர்கான் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதன் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ஆக. 14-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

x