‘எல்2: எம்புரான்’ விமர்சனம்: ப்ளஸ், மைனஸ் என்னென்ன?


நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியாகியுள்ள படம் ‘எல்2: எம்புரான்’. இதே கூட்டணியின் ‘லூசிஃபர்’ வெற்றிப் படத்தின் இரண்டாவது பாகமான இப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? - இதோ ப்ளஸ், மைனஸ் விமர்சனப் பார்வை...

முதல்வர் (டோவினோ தாமஸ்) நகர்வுகளால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்கும் சூழலில் குரேஷ் ஆப்ராம் என்கிற ஸ்டீஃபர்ன் நெடும்பள்ளி (மோகன்லால்) அமைதியை நிலைநாட்டினாரா என்ற அரசியல் ஆக்‌ஷன் ஒன்லைன் ப்ளஸ்.

ஒரு பாலைவனத்தில் ஹீரோ மோகன்லால் ‘மாஸ்’ என்ட்ரி கொடுப்பதற்குள், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்து விடுகிறது. திரைக்கதையில் இழுவை காரணமாக ‘எம்புரான்’ வேகம் எடுக்காதது மைனஸ்.

ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமான திரை அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக இயக்குநர் பிருத்விராஜின் டீமின் கடுமையான உழைப்பு ப்ளஸ்.
குறிப்பாக, சுஜித் வாசுதேவனின் கேமரா, தீபக் தேவின் பின்னணி இசை, அகிலேஷ் தேவின் எடிட்டிங் என அனைத்தும் ப்ளஸ்தான்.

ஆனால், இந்தப் ப்ளஸ்களை எங்கேஜிங்காக கொண்டு செல்லக்குடிய வகையில் திரைக்கதையில் அடித்தளம் அமைக்கப்படாதது மைனஸ்.

ஹீரோ என்ட்ரியை தவிர்த்து ஒட்டுமொத்த முதல் பாதியுமே நம்பி வந்த மாஸ் ஆடியன்ஸுக்கு பெரிதாக தீனி போடாததும் மைனஸ்தான்.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் ‘எம்புரான்’ படத்தில் நினைவில் வைத்துக் கொள்ளக் கூடிய காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிட முடியும் என்பதும் பெரிய மைனஸ்.

ஸ்டன்ட் சிவாவின் அதகளமான சண்டைக் காட்சிகள், குறிப்பாக காட்டில் நடக்கும் மிகச் சிறப்பான ஆக்‌ஷன் காட்சி மிகப் பெரிய ப்ளஸ்.

படு ஸ்டைலிஷ் ஆக வலம் வரும் மோகன்லால், படம் முழுக்க தனது ஆளுமையை ஒவ்வொரு காட்சியிலும் நிறுவி இருப்பதும் ப்ளஸ்தான்.

பிருத்விராஜ் சுகுமாறன், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையை திறம்ப்ட செய்துள்ளதும் ப்ளஸ்.

குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகளை காட்டிய விதமும், வன்முறைகளை நேர்த்தியாக கையாண்ட விதமும் பிருத்விராஜ் இயக்கத்துக்கு ப்ளஸ்.

எதிர்பாராத ட்விஸ்ட், திரைக்கதையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லாமல் ரசிகர்களின் எளிதான யூகத்துக்கு ஏற்பவே க்ளைமாக்ஸ் நோக்கி நகர்வது மைனஸ்.

‘எம்புரான்’ படத்தில் நீளமும், பான் இந்தியா முயற்சிகளும் மைனஸ்தான் என்றாலும், இயன்றவரை ரசிகர்களுக்கு திருப்தியான திரை அனுபவத்தை தர முயற்சி செய்திருப்பதை உணர முடிகிறது.

x