‘டிராகன்’ படக்குழுவை பாராட்டிய விஜய்!


பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோஹர் உட்பட பலர் நடித்து, கடந்த மாதம் 21-ம் தேதி வெளியான படம், ‘டிராகன்’ . ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து இயக்கிய இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்ட டிராகன் படக்குழுவினரை நடிகர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ரங்கநாதன், “‘கலக்குறீங்க ப்ரோ’ என விஜய் சொன்னபோது, நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள். விஜய்யின் இந்த வார்த்தைகளுக்கு நன்றி. அவருடைய ’சச்சின்’ ரீ-ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

x