‘டாக்ஸிக்’ ரிலீஸ் எப்போது?


யாஷ், நயன்தாரா, ஹூமா குரேஷி உட்பட பலர் நடிக்கும் படம், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன் அப்ஸ்’. இதை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா, யாஷ் இணைந்து தயாரிக்கின்றனர்.

கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 2026-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி வெளியாக இருக்கிறது.

x