ஹீரோவாக மீண்டும் நடிக்கிறார் சுரேஷ்!


தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘ஹரா’ இயக்குநர் விஜய் இயக்குகிறார். மலேசியாவைச் சேர்ந்த ஜிவி இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில் மலேசிய ரஜினிகாந்த் என்று அழைக்கப்படும் டத்தோ கணேஷ், அனித்ரா நாயர், ராஜேந்திரன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கி இந்தியா மற்றும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. ரஷாந்த் ஆர்வின் இசை அமைக்கிறார். இதன் டைட்டில் டீஸர், ஏப்.19-ல் மலேசியாவில் வெளியாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பரபரப்பான கதையைப் பின்னணியாகக் கொண்டது என்கிறது படக்குழு.

x