ரீ ரிலீஸ் ஆகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’


ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்து கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. எம்.ராஜேஷ் இயக்கிய இந்தப் படத்தில் சித்ரா லட்சுமணன், மொட்ட ராஜேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், சுப்பு பஞ்சு, அஸ்வின் ராஜா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நவீன தொழில்நுட்ப மெருகேற்றலுடன் வரும் 21-ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. குரு சம்பத்குமாரின் அமிர்தா பிலிம்ஸ் வெளியிடுகிறது.

x