பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், அட்லீ இயக்கத் தில் நடித்த ‘ஜவான்’ ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர் தென்னிந்திய இயக்குநர்களின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் என்கிறார்கள். இந்நிலையில் ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
“சுகுமார் இயக்கும் படத்தில் கொஞ்சம் ‘நெகட்டிவ் ஷேட்’ கொண்ட கதாபாத்திரத்தில் ஷாருக்கான் நடிக்க இருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் உருவாகும் அரசியல் ஆக்ஷன் படமாக, கமர்ஷியல் விஷயங்களுடன் இது உருவாக இருக்கிறது” என்கிறார்கள். ஷாருக்கான் ஏற்கெனவே எதிர்மறை நாயகனாக சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சுகுமார், ‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.