கயாடு லோஹருக்கு வரிசைகட்டும் புதிய படங்கள் என்னென்ன? - போட்டோ ஸ்டோரி


‘டிராகன்’ நாயகி கயாடு லோஹருக்கு பல முன்னணி படங்கள் இப்போது வரிசைகட்ட தொடங்கியிருக்கின்றன.

அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர் கயாடு லோஹர். வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான்.

2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான ‘முகில்பெடெட்’ மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளத்தில் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு', தெலுங்கில் 'அல்லுரி', மராத்தியில் 'I Prem U' உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கயாடு லோஹர் இப்போது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார்.

கயாடு லோஹரின் நடனம், காட்சியமைப்புகள் அனைத்துமே இளைஞர்கள் மத்தியில் அவரை கொண்டாட வைத்துள்ளது. இணையத்தில் தொடர்ச்சியாக இவரது வீடியோக்களை ரசிகர்கள் பகிரத் தொடங்கினார்கள்.

நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர் பட்டாளம் விரிவடைந்து வரும் அதேவேளையில், முன்னணி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் மிகுதியாகி இருக்கிறது.

தற்போது அவர் ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வருகிறார் கயாடு லோஹர்.

அதைத் தொடர்ந்து, காளிதாஸ் நடிக்கும் ‘நிலா வரும் வேளை’ படத்தில் நடிக்கவுள்ளார். விஸ்வாக் சென் நடிக்கும் ‘ஃபங்கி’, நிவின் பாலி நடிக்கும் ‘தாரம்’ ஆகிய படங்களை உறுதி செய்திருக்கிறார் கயாடு லோகர்.

தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்கவும் கயாடு லோஹருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தற்போது உறுதியாகும் படங்களை நடிக்கவே 2025-ம் ஆண்டு இறுதிவரை தேதிகளை ஒதுக்கியிருக்கிறார் கயாடு லோஹர். தமிழில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படத்தில் நடிக்கவும் அணுகப்பட்டு வருகிறார் கயாடு லோஹர்.

x