தொடர்ந்து கசியும் ராஜமவுலி படக் காட்சிகள்!


‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா நாயகியாகவும் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இப்போது, ஒடிசா மாநிலம் கோராபுட்டில் இதன் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கு, ரசிகர் ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்த படப்பிடிப்பு காட்சிகளை, ஒடிசா மாநில சேனல்கள் ஒளிபரப்பின. சமூக வலைதளங்களிலும் அக்காட்சிகள் கசிந்தன. இந்நிலையில் இப்போது மீண்டும் புதிய வீடியோ காட்சி கசிந்துள்ளது.

இதையடுத்து படக் காட்சிகளை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளப் படக்குழு, படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

x