இசையமைப்பாளர் இளையராஜா ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி அரங்கேற்றத்துக்காக லண்டன் சென்றுள்ளார். இதையொட்டி, அவருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவுக்கே பெருமை! பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த இளையராஜா, “சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல; இந்த நாட்டின் பெருமை” என்று கூறினார்.