ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர், தெலுங்கு சினிமா பாடல்களுக்கு நடனமாடி, அவற்றின் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்தார். அந்த அணியை விட்டு விலகிய பின்பும் தெலுங்கு சினிமா மீதான அவரது ஆர்வம் குறையவில்லை.
அவரை நடிக்க வைக்க பலரும் முயற்சி செய்தார்கள். இப்போது நிதின் நாயகனாக நடிக்கும் ‘ராபின்ஹுட்’ என்ற படத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிசங்கர் இதை உறுதிப்படுத்தியுள்ளார். வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் சிறப்புத் தோற்றத்தில் டேவிட் வார்னர் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது.