சுந்தர்.சி - வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!


சுந்தர்.சி இயக்கிய, ‘அரண்மனை 4’ சூப்பர் ஹிட்டானதை அடுத்து அவர் இயக்கிய ‘மதகஜராஜா’, 12 வருடங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகி வெற்றிபெற்றது. இதையடுத்து வடிவேலு நடிப்பில் அவர் இயக்கியுள்ள படம், ‘கேங்கர்ஸ்’. சுந்தர்.சி, வடிவேலு இணைந்த ‘வின்னர்’ கைப்புள்ள, ‘தலைநகரம்’ நாய்சேகர், ‘நகரம் மறுபக்கம்’ ஸ்டைல் பாண்டி ஆகிய கதாபாத்திரங்கள் அதிகம் ரசிக்கப்பட்டதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதில் வடிவேலு 5 கெட்டப்களில் நடித்துள்ளார்.

பெண் வேடமிட்டும் அவர் நடித்துள்ளார் என்றும் இந்தப் படம் வடிவேலுவுக்கு ‘கம் பேக்’ படமாக அமையும் என்றும் கூறுகிறார்கள். இதில் சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ளார். கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்.24-ம் தேதி
வெளியாகிறது.

x