அஜித்தை இயக்குகிறார் தனுஷ்!


தமிழ் சினி​மா​வின் முன்​னணி நடிகர்​களில் ஒரு​வ​ரான தனுஷ், நடிப்​போடு படம் இயக்​கு​வ​தி​லும் அதிக ஆர்​வம் காட்டி வரு​கிறார். ‘பா.​பாண்​டி’, ‘ராயன்’ படங்​களை இயக்​கிய அவர், சமீபத்​தில் வெளி​யான ‘நில​வுக்கு என் மேல் என்​னடி கோபம்?’ என்ற படத்தை இயக்கி இருந்​தார்.

அடுத்​து, ‘இட்​லிக் கடை’ படத்தை இயக்கி நடித்​துள்​ளார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்​டே, ராஜ்கிரண் உட்பட பலர் நடித்​துள்​ளனர். இதற்​கிடையே ஆனந்த் எல். ராய் இயக்​கத்​தில் ‘தேரே இஷ்க் மே’ என்ற இந்தி படத்​தில் நடித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் அஜித் நடிக்​கும் படத்தை தனுஷ் இயக்க இருப்​ப​தாக​வும் அதை தனுஷின் வுண்​டர்​பார் பிலிம்ஸ் தயாரிக்க இருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதுகுறித்து தனுஷ் தரப்பில் விசா​ரித்​த​போது, இன்​னும் அதி​காரப்பூர்வ​மாக எது​வும் முடி​வாக​வில்லை என்​றனர்.

x