Top 5 Cine Bits: வித்யா பாலன் ‘டீப்ஃபேக்’ அலர்ட் முதல் அஜித் டீசர் சாதனை வரை


வித்யா பாலன் ‘டீப்ஃபேக்’ அலர்ட்: நடிகை வித்யா பாலன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட எச்சரிக்கை பதிவில், “சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் நான் இடம்பெற்றிருப்பது போல சில வீடியோக்கள் பரவி வருகின்றன. அவை ஏ.ஐ (டீப்ஃபேக்) மூலம் போலியாக உருவாக்கப்பட்டவை. அதன் உருவாக்கம் மற்றும் அதைப் பரப்புவதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

அந்த வீடியோவில் வரும் விஷயங்கள் எதையும் நான் ஆதரிக்கவில்லை. வீடியோவில் கூறப்படும் எந்தக் கருத்துக்கும் நான் காரணமல்ல. இதுபோன்ற வீடியோவை பகிர்வதற்கு முன்பு, ரசிகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
கேட்டுக்கொண்டுள்ளார்.

அட்லீ - அல்லு அர்ஜுன் காம்போ: சல்மான் கானுக்காக தான் எழுதிய கதையில் அல்லு அர்ஜுனாவை நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் அட்லீ. அல்லு அர்ஜுனுடன் அட்லீ இணைவது உறுதியான நிலையில், அதில் இன்னொரு நடிகர் மற்றும் இதர நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்படத்துக்கு 3 கதாநாயகிகள் என்பது கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இது அரசர் காலமும், நிகழ்காலமும் கலந்து நடக்கும் கதை என்பதும், இதற்கான பட்ஜெட் மிக மிக அதிகம் என்பதும் பெரிதும் பேசப்படும் விஷயமாக உள்ளது.

ஓடிடியிலும் சாதித்த ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ - வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சு சவுத்ரி காம்போவில் ரூ.300 கோடி வசூலுடன் தெலுங்கில் சமீபத்திய மெகா ஹிட் படமான ‘சங்கராந்திக்கி வஸ்துணம்’ ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இப்படம் மார்ச் 1 மாலை 6 மணியளவில் ஜீ5 தொலைக்காட்சி ஒளிபரப்பும், ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸும் ஆனது.

இந்நிலையில், ஜீ5 ஓடிடி தளத்தில் ‘சங்கராந்திக்கு வஸ்துணம்’ படம் வெளியான முதல் 12 மணி நேரத்தில், 1.3 மில்லியன் பார்வையாளர்களுடன் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துல்கரின் அடுத்த படம்:துல்கர் சல்மான் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரே தயாரிக்கும் இந்தப் படத்தை ‘ஆர்டிஎக்ஸ்’ புகழ் நிஹாஸ் ஹிதயாத் இயக்குகிறார். I’m Game என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 40-வது படமாகும். I’m Game படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் டீசர் சாதனை: பிப்.28-ம் தேதி இரவு 7:03 மணிக்கு யூடியூபில் வெளியான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டீசர், தமிழில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை அடைந்த டீசர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இதுவரை ‘மாஸ்டர்’ படத்தின் டீசர்தான் 19.35 மில்லியன் உடன் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கொண்ட டீசர் என்ற சாதனையை படைத்திருந்தது. இந்தச் சாதனையை முறியடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ முதல் 24 மணி நேரத்தில் 31.1 மில்லியன் பார்வைகளை அடைந்தது.

குட் பேட் அக்லி மற்றும் மாஸ்டர் படத்துக்குப் பிறகு இந்த சாதனைப் பட்டியலில் ‘கேப்டன் மில்லர்’ டீசர் (17.46 மில்லியன்), ‘சர்கார்’ டீசர் (14.92 மில்லியன்), ‘கங்குவா’ டீசர் (14.72 மில்லியன்) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது

x