திரையுலக பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகளை மர்மநபர்கள் முடக்குவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. சமீபத்தில் நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்தி நடிகை, ஸ்வரா பாஸ்கர், நயன்தாரா உட்பட சிலரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இந்நிலையில், தனது எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகப் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“எனது எக்ஸ் தள கணக்கை பிப். 13-ம் தேதி முதல் யாரோ முடக்கியுள்ளனர். அதை மீட்க என்னால் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் இல்லை. அந்த கணக்கின் உள் நுழைய முடியாததால் அதை நீக்கவும் இயலவில்லை. அதனால் அந்த கணக்கில் இருந்து வரும் எந்த இணைப்பையும் தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம். கணக்கு மீட்கப்பட்டால் தெரிவிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.