பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கன்னா, யோகிபாபு நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தின் ப்ளஸ், மைனஸ் விமர்சனம் இது...
ஒரு பழங்கால பங்களாவை ‘ஸ்கேரி ஹவுஸ்’ ஆக உருவாக்கி காசு பார்க்கும் உத்தியை செயல்படுத்தும்போது, அங்கே நிஜமாகவே ரகசியங்களும் பேயும் வெளிவந்தால் என்ன ஆகும்?’ என்ற ஒன்லைனே ப்ளஸ்தான்.
ஃபேன்டஸி ஹாரர் கதையில் பீரியட், த்ரில்லர், பழிவாங்கல், சித்த மருத்துவம், அம்மா சென்டிமென்ட் பல விஷயங்களை காக்டெயில் ஆக்க முயன்றது ப்ளஸ்தான். ஆனால், ஆங்காங்க வரும் பாடல்களும் காட்சிகளும் பெரும் மைனஸ்.
1940-ம் ஆண்டிலும், நிகழ்காலத்திலுமாக நடப்போது போன்ற திரைக்கதை ப்ளஸ்தான். ஆனால், படத்தின் வேகத்தைக் குறைக்கும் இரண்டாம் பாதி முக்கியமான மைனஸ்.
பிரெஞ்சு அதிகாரிக்கும் சித்த மருத்துவருக்கும் இடையில் நடக்கும் மோதலும் நட்பும், பின்னர் வரும் எதிர்பாராத திருப்பமும் ப்ளஸ்தான். ஆனால், ஃபேன்டஸி ஹாரர் ஜானரில் முழுமையான அனுபவம் கடத்தாதது மைனஸ்.
‘அகத்தியா’ நாயகன் ஜீவா தன் பங்களிப்பை கச்சிதமாக செய்திருப்பதும், சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் சர்ஜா ஸ்கோர் செய்த விதமும், ராஷி கன்னாவின் பிரஸன்ஸும் முக்கிய ப்ளஸ்கள்.
வில்லன் எட்வர்ட் சோனன்பிளிக், காதல் காட்சிகளுக்காக மெடில்டா, சில டைமிங் காமெடி செய்யும் ஷா ரா, ராதாரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், சென்டிமென்ட் காட்சிளுக்காக கவனிக்க வைக்கும் ரோகிணி, சார்லி என கதாபாத்திர அணிவகுப்பு இருப்பது ப்ளஸ்தான் என்றும் கூட, ரசிகர்களை எந்த விதத்திலும் எமோஷனலாக கனெக்ட் செய்யாமல் போவது பலத்த மைனஸ்.
டெக்னிக்கலாக குறையும் இன்றி, நிறையும் இன்றி இருப்பது ‘அகத்தியா’வுக்கு ப்ளஸ்ஸும் இல்லை, மைனஸும் இல்லை.
சித்த மருத்துவ பெருமையைப் பேசுகிறேன் என்ற பெயரில் அலோபதி மருத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற அபத்தங்களின் அணிவகுப்பு மிகப் பெரிய மைனஸ்.
அபத்தங்களும் சலிப்பான காட்சிகளும் அவ்வப்போது தென்படுவது மைனஸ்தான் என்றாலும், ரசிகர்களை ஏதோ விதத்தில் இயன்றவரை எங்கேஜிங்காக வைத்திருக்க முயற்சி செய்திருப்பது ப்ளஸ்தான்.