மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அனில் உட்பட பலர் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் ‘பாபநாசம்’ என்றபெயரில் உருவாகி வெற்றி பெற்றது. இதன் 2-ம் ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘த்ரிஷ்யம் 3’ பாகம் உருவாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் த்ரிஷ்யம் 3 உருவாக இருப்பதை மோகன்லாலும் உறுதி செய்தியுள்ளார். இயக்குநர் ஜீத்து ஜோசப், தயாரிப்பாளர் ஆண்டனிபெரும்பாவூர் ஆகியோருடன் நிற்கும் புகைப் படத்தை வெளியிட்டுள்ள அவர், "கடந்த காலம் அமைதியாகவே இருக்காது" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகத் தெரிகிறது.