அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்துக்கு 'அஃகேனம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில், கீர்த்தி பாண்டியன், பிரவீன் ராஜா, ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண்பாண்டி யன் தயாரித்திருக்கிறார்.
படத்தை இயக்கி இருக்கும் உதய் கே கூறும்போது, “நான் குறும்படங்கள் இயக்கி விட்டு நேரடியாக இந்தப் படத்தை இயக்கி இருக்கிறேன். துஷாரா விஜயன் நடித்த ‘யாக்கை திரி’ என்ற பைலட் படத்தை இயக்கியதன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஆயுத எழுத்துக்கான, வார்த்தை வடிவத்தை முப்பாற்புள்ளி என்போம். அதுதான் ‘அஃகேனம்’.
இந்தப் படத்தின் கதை, அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ஆதித்யா ஷிவ்பிங்க் ஆகிய 3 கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கிறது என்பதால் இந்த தலைப்பை வைத்தேன். இது பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லர் கதையை கொண்ட படம். படத்தின் கதை வெளிமாநிலங்களிலும் நடக்கிறது. பிரபல ஓடிஸி நடன மேதை கங்காதர் நாயக், அவரது குழுவினருடன் பாடல் காட்சியில் நடனமாடி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது” என்றார்.
Launching the title & first look of #Akkenam, Good luck to the team!
https://t.co/Sq7P3ajBJY#AandPGroups4 @AandPgroups @iarunpandianc @ikeerthipandian @praveenraja0505 @kav_pandian @Shivpink @namritha_mv @udayk2410 @VigneshGovind09 @barathveeraa @devathyan @divomusicindia… pic.twitter.com/RpbT5HohZW— VijaySethupathi (@VijaySethuOffl) February 18, 2025