இயக்குநர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை


எஸ்​.ஏ.சந்​திரசேகர், ஒய்.ஜி.மகேந்​திரன், சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான் என பலர் நடித்​துள்ள படம், ‘கூரன்’. ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்​டத்​தைக் கதையாக வைத்து உருவாகி இருக்​கும் இப்படத்தை அறிமுக இயக்​குநர் நிதின் வேமுபதி இயக்கி​யுள்​ளார். கனா புரொடக்​ஷன்ஸ் சார்​பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்​குநர் விக்கி தயாரித்​துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறு​வனம் வெளி​யிடு​கிறது.

இதன் ட்ரெய்லர் வெளி​யீட்டு விழா​வில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்​போது, “என் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கை​யில், இது உண்மையிலேயே வித்​தி​யாசமான படம். இதில் நாய் தான் கதாநாயகன். சில படங்​களைப் பார்க்​கும்போது கஷ்டமாக உள்ளது. எழுத்​தாளன் படைக்​கும் பாத்​திரங்கள் முன்னோடியாக இருக்க வேண்​டும். கத்தியை எடு, தலையைவெட்டு என்று கூறும் படங்​களைப் பார்த்துவிட்டு, வெளியே செல்​கிறவனும் அதையே செய்து கொண்​டிருந்​தால் இளைய சமுதாயம் என்ன ஆகும்? அந்த பொறுப்புணர்வு இயக்​குநர்​களுக்கு வேண்​டும். ‘கூரன்’ 2 மணி நேர படம்​தான். நேர்த்தியாக இருக்​கும்​” என்​றார்​.

x