கறுப்பு உடையில் ஸ்ருதிஹாசன் பகிர்ந்த சமீபத்திய புகைப்படங்கள் இப்போது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் அவர், “லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும்” என்றார்.
“ரஜினியுடன் நடிப்பது, எனக்கு சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது” என்று சிலாகிக்கிறார்.
‘ஜன நாயகன்’ படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் ஸ்ருதிஹாசன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.