விஜய் மகனின் திரைமொழி: சந்தீப் கிஷன் சிலாகிப்பு


இயக்குநராக அறிமுகமாகும் விஜய் மகன் சஞ்சய்யின் திரைமொழி குறித்து வியந்து பேசியிருக்கிறார் சந்தீப் கிஷன்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கவுள்ளார். இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவுற்றது. விரைவில் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

தற்போது ‘மசாக்கா’ என்னும் தெலுங்கு படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் இருக்கிறார் சந்தீப் கிஷன். அவரிடம் ஜேசன் சஞ்சய் படம் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “விஜய் சாருடைய மகன் சஞ்சய் கதை சொல்ல விரும்புவதாக கால் ஒன்று வந்தது. முதலில் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் ஹைதராபாத்துக்கு வந்து இரண்டரை மணி நேரம் ஒரு சிறந்த கதையை கூறினார். உடனே, நடிக்கிறேன் என கூறிவிட்டேன்.

அவரது திரைமொழி, இயக்குநராகும் உறுதி மற்றும் அதற்கான பயிற்சி என அனைத்துமே மிகவும் கவர்ந்தது. அவரது அப்பாவின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரிய பொறுப்பு அவரிடம் உள்ளது. அதுமட்டுமன்றி அவரது அப்பா ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.

ஆகையால் அவரின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். இருவரும் இணைந்து என்ன உருவாக்கப் போகிறோம் என்பதை காண நானே ஆவலாக இருக்கிறேன். படத்திற்கு இப்போதே தமன் அழகான பாடல்களைக் கொடுத்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜேசன் சஞ்சய்யுடன் அப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

x