இசை அமைப்பாளர் தமன், தமிழ், தெலுங்கில் பணியாற்றி வருகிறார். தெலுங்கில் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கும் அவர் பாலகிருஷ்ணா நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து இசை அமைத்து வருகிறார்.
அவர் நடித்த, அகண்டா, வீர சிம்மா ரெட்டி, பகவந்த் கேசரி, டாக்கு மகாராஜ் ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ள தமன், அடுத்து அகண்டா 2 படத்துக்கும் இசை அமைத்து வருகிறார். இந்நிலையில் தமனுக்கு போர்ஷே சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா.