கிஸ் முதல் தோற்றம் வெளியீடு!


நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

நாயகியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ள இதில், தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜென் மார்டின் இசை அமைத்துள்ளார். ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ‘கிஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் 14-ம் தேதி டிரெய்லர் வெளியாகிறது.

​​

x