பரபரப்பான அரசியல் கதையில் கராத்தே பாபுவாக ரவி மோகன்!


‘டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ரவி மோகன் நடித்து வரும் படத்துக்கு ‘கராத்தே பாபு’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கிறது. சாம் சிஎஸ் இசை அமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல் கதையை கொண்ட இந்தப் படத்தில் நடிகர் நாசர் முதலமைச்சராகவும் கே.எஸ்.ரவிகுமார் எதிர்க்கட்சித் தலைவராகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டீஸரில், சட்டமன்றத்தில் நடக்கும் காட்சியில் ரவி மோகன் பேசும்போது, “உங்கள் அனைவருக்கும் என்னை சண்முக பாபுவாகத்தான் தெரியும். எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. 17 வருடங்களுக்கு முன் ஆர்.கே.நகர் மக்களால் கொடுக்கப்பட்ட பெயர் அது” எனக் கூறி முடிக்கிறார். உடனடியாக படத்தின் தலைப்பு ‘கராத்தே பாபு’ என வருகிறது.

மேலும் முதல்வர் நாசர், “மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறியதற்கும் காரணம் இருக்கிறது. தமிழ்நாடு தமிழகம் ஆகாமல் இருக்கப் பாதுகாத்துக் கொள்வதற்கும் காரணம் இருக்கிறது” என்று பேசும் வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

x