விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!


விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்: பாகம் 2’. முதல் பாகத்துக்கு முன்பே 2-ம் பாகத்தைப் படமாக்கியுள்ளனர்.எஸ்.யூ. அருண்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்குத் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ், டீஸர் ஆகியவை வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இந்தப் படம் இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மார்ச் 27-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

x