தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!


தயாரிப்பாளர் தில் ராஜூ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜூ. தெலுங்கில் சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்டப் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களை இவர் தயாரித்திருக்கிறார். தமிழில் விஜயின் ‘வாரிசு’ படத்தை தயாரித்திருந்தார்.

தற்போது பொங்கல் பண்டிகைக்கு வெளியான ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ மற்றும் வெங்கடேஷ் இயக்கிய ’வஸ்துன்னம்’ ஆகிய படங்களையும் இவர் தயாரித்திருந்தார். இதில் ரூ.450 கோடிக்கு இவர் தயாரித்த ‘கேம் சேஞ்சர்’ படம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், ‘வஸ்துன்னம்’ படம் ரூ. 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.120 கோடிக்கும் அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு, பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கோண்டாப்பூர், கச்சிபெளலி உள்பட 8 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

x