டிராகன் ரிலீஸ் தேதி மாற்றம்!


‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்து, இயக்கும் படம், ‘டிராகன்’. பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இதில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கவுதம் வாசுதேவ் மேனன், கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இந்தப் படம் பிப்.14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பிப்.6-ம் தேதி வெளியாக இருப்பதால் இந்தப் படத்தின் தேதியை பிப்.21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

தனுஷ் இயக்கத்தில் அவர் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படமும் பிப். 21-ம் தேதி வெளியாகிறது.

x