‘பத்திக்கிச்சு’ பாடல் எப்படியிருக்கு? - ‘விடாமுயற்சி’ ஃபீவரில் அஜித் ரசிகர்கள்!


சென்னை: 'விடாமுயற்சி’ படத்திலிருந்து ‘பத்திக்கிச்சு’ என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இரண்டாவது பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்​தின் ‘விடா​முயற்​சி’க்கு ஏகப்​பட்ட எதிர்​பார்ப்பு எழுந்துள்ளது. பொங்​கலுக்கு வெளியாக வேண்டிய படம் பிப்​. 6-ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் ‘சவதீகா’ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர்.

‘பத்திக்கிச்சு’ என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள இந்த பாடல் வெறித்தனமாக இருக்கிறது. இந்தப் பாடலை விஷ்ணு எடாவன் வரிகளில் அனிருத் மற்றும் யோகி சேகர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இப்படம் ஹாலிவுட் படமான ‘ப்ரேக் டவுன்’ படத்தின் தழுவல் என்பது நினைவுக் கூரத்தக்கது.

x