இயக்குநர் ஜெயமுருகன் மாரடைப்பால் காலமானார்


இயக்குநரும் தயாரிப்பாளருமான டி.எம்.ஜெயமுருகன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 65.

மன்சூர் அலிகான், கஸ்தூரி நடித்த ‘சிந்துபாத்’ படத்தைத் தனது மனிதன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தவர் திருப்பூரை சேர்ந்த டி.எம்.ஜெயமுருகன். பிறகு முரளி நடித்த ‘ரோஜா மலரே’, ஜெய் ஆகாஷ் நடித்த ‘அடடா என்ன அழகு’, கார்த்திக் நடித்த ‘தீ இவன்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

‘அடடா என்ன அழகு’, ‘தீ இவன்’ படங்களுக்கு அவரே இசை அமைத்துப் பாடல்களை எழுதியிருந்தார். இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ஜெயமுருகன் வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அவரது இறுதிச்சடங்கு திருப்பூரில் நேற்று நடந்தது. மறைந்த ஜெயமுருகனுக்கு மனைவி நிர்மலா தேவி, மகன்கள் நடிகர் சுமன், சுகுமார் ஆகியோர் உள்ளனர்.

x