நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!


சென்னை: நடிகர் ரவி மோகன் விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிவதாக சமூகவலைதளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். ஆனால், ரவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், சமூகவலைதளங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளைத் தான் மறுப்பதாகவும் ஆர்த்தி ரவி விளக்கமளித்தார். மனைவியிடம் இருந்து விவாகரத்து வேண்டி ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. மூன்று முறை சமரச பேச்சுவாத்தைக்கு ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கு இன்று குடும்பநல நீதிபதி தேன்மொழி முன்பு விசாரணைக்கு வந்தது. காணொலி மூலம் ஆஜரான ரவி, ஆர்த்திக்கு இடையேயான சமரச பேச்சுவார்த்தைக்கான மத்தியஸ்தர் அழைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால், சமரச பேச்சு வார்த்தைக்குப் பின்னரே வழக்கின் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்த நீதிபதி வழக்கினை பிப்ரவரி 15ஆம் தேதி தள்ளி வைத்தார்.

x