பிரபல தயாரிப்பாளர் டி.எம். ஜெயமுருகன் நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.
நடிகர் முரளி நடித்த 'ரோஜா மலரே', ஜெய் ஆகாஷ் நடித்த 'அடடா என்ன அழகு', கார்த்திக் நடித்த 'தீ இவன்' ஆகிய படங்களை தயாரித்து, இயக்கியவர், டி.எம்.ஜெயமுருகன். மேலும் 'புருசன் எனக்கு அரசன்', 'சிந்துபாத்' ஆகிய படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.
ஏராளமான படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ள டி.எம்.ஜெயமுருகன், சில படங்களில் நடித்து, இசை அமைப்பிலும் ஈடுபட்டார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த டி.எம்.ஜெயமுருகன் நேற்றிரவு சிகிச்சைப் பலனளிக்காமல் மாரடைப்பால் காலமானார்.
இன்று மாலை இறுதிசடங்குகள் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், திரையுலகினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.