சென்னை: மூன்று பாகங்களாக ‘வேள்பாரி’ நாவலை படமாக்க உள்ளதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.
‘இந்தியன்2’ மற்றும் ’கேம் சேஞ்சர்’, படங்களை முடித்துவிட்டு இயக்குநர் ஷங்கர் தற்போது ‘இந்தியன்3’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதுகுறித்து தன்னுடைய சமீபத்திய பேட்டியில், “’கேம் சேஞ்சர்’ படத்திற்கு வரும் கலவையான விமர்சனங்களை கவனித்து வருகிறேன். சிலர் என்ன நன்றாக எடுத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். ‘கேம் சேஞ்சர்’ படத்திற்குப் பிறகு அடுத்த சில மாதங்கள் ‘இந்தியன்3’ படத்தை முடித்து கொடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்.
இதற்கடுத்து, என்னுடைய கனவுப் படம் என்றால் அது ‘வேள்பாரி’தான். மூன்று பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறேன். மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய இந்த நாவலுக்கான திரைக்கதை முடித்து விட்டேன்” என்றும் கூறியுள்ளார்.