2 நொடியில் வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட ஜாக்குலின்; பிக்பாஸ் காட்டிய கருணை!


சென்னை: பிக்பாஸில் பணப்பெட்டி டாஸ்க்கில் தவறவிட்ட ஜாக்குலினுக்கு பிக்பாஸ் கருணை காட்டியிருக்கிறார்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. இதில் இந்த வாரம் நடந்த பணப்பெட்டி டாஸ்க்கில் பிக்பாஸ் கொடுத்த நேரத்திற்குள் பணப்பெட்டியை எடுக்காமல் 2 நொடிகள் தாமதமாகி விட்டதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் வாய்ப்பை ஜாக்குலின் தவறவிட்டிருக்கிறார்.

இதனால், ஜாக்குலின் மட்டுமல்லாது சக போட்டியாளர்களும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட அருண் பிரசாத், தீபக் ஆகியோர் வெளியேறியதைத் தொடர்ந்து இப்போதும் ஜாக்குலினும் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் 8 ஆவது சீசன் தொடங்கியதில் இருந்து அனைத்து வாரங்களிலும் ஜாக்குலின் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாது, அவர் எந்த வாரமும் கேப்டனாகவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 15 வாரங்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் அவரது வலுவான விளையாட்டு காரணமாக ஜாக்குலினை பார்வையாளர்கள் தொடர்ந்து சேவ் செய்தனர்.

அவரின் விளையாட்டை பாராட்டி எந்த போட்டியாளர்களுக்கும் காட்டாத சலுகையாக பிக்பாஸ் ஜாக்குலினிடம் ’நீங்கள் டிராஃபியை உடைக்க வேண்டாம். உங்களுடைய விளையாட்டிற்கான பரிசு’ என சொல்லி இருக்கிறார். இது ஜாக்குலினை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

x