மனநிம்மதிக்காக சுவாமி தரிசனம்: நடிகர் ரவி மோகன் பேட்டி!


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரவி மோகன் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.

தை மாதம் பிறந்த நிலையில், திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நடிகர் ரவி மோகன் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார். சம்பந்த விநாயகர் மற்றும் சாமி அம்பாளை தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.

அவருடன் செல்ஃபி புகைப்படம் எடுக்க அங்கு வருகை தந்த பக்தர்கள் ஆர்வம் காட்டினர். தொடர்ந்து அவர் பேசுகையில், “’காதலிக்க நேரமில்லை’ படம் வெளி வந்ததற்கும் நான் கோவிலுக்கு வந்ததற்கும் சம்பந்தமில்லை. தாய், தந்தையர் செய்த புண்ணியத்தாலும் மன நிம்மதிக்காகவும் கோவிலுக்கு வந்தேன். அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும் என மனதிற்கு தோன்றினால் திருவண்ணாமலைக்கு வந்து விடுவேன். அடுத்து நான் நடித்து வரும் ‘ஜீனி’ படப்பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது” என்றார்.

x