‘வணங்கான்’ படத்தின் வெற்றி; பாலா குறித்து நெகிழ்ந்த நடிகர் அருண் விஜய்!


சென்னை: ‘வணங்கான்’ படத்தின் வெற்றி குறித்தும் தன்னுடைய கதாபாத்திரம் குறித்தும் அருண் விஜய் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

பாலா இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய், ரோஷிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தன்னைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த அநீதியை தட்டிக் கேட்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களுக்கும் படத்தில் தன்னுடைய கோட்டி கதாபாத்திரம் பற்றியும் நெகிழ்ச்சியாக அருண் விஜய் ட்வீட் செய்திருக்கிறார். அதில், ‘’வணங்கான்’ படத்தில் கோட்டியாக என்னை வாழ வைத்ததற்கு நன்றி பாலா சார். கோட்டி போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு என் வாழ்நாளில் ஒருமுறைதான் கிடைக்கும். இந்த கதாபாத்திரத்தில் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அனைவரது மனதையும் வென்றிருக்கிறேன். இது எல்லாம் உங்களால்தான். என்னுடைய நடிப்புத்திறன் என்ன என்பதை எனக்கே உணர வைத்திருக்கிறீர்கள். இதற்கெல்லாம் என்றும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

x