ரஜினிகாந்த் நடித்து கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். உலகம் முழுவதும் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்த இதன் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டீஸர் பொங்கலன்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் இந்த டீஸர் திரையிடப்பட்டது. சென்னையில் கமலா, ரோகிணி, வெற்றி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதிரடி ஆக்ஷனுடன் வெளியாகியுள்ள இந்த டீஸர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடித்துவரும் ரஜினி, அதை முடித்துவிட்டு இதில் நடிக்கிறார்.