சென்னை: நடிகர் அஜித்தின் தலைமீது கைவைத்து ரசிகர் ஒருவர் கடுப்பேற்றி இருக்கிறார்.
’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களை முடித்து கொடுத்திருக்கும் அஜித் தற்போது தனக்குப் பிடித்தமான கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். சமீபத்தில் துபாயில் நடந்து முடிந்த கார் ரேஸில் ’அஜித்குமார் ரேஸிங் அணி’ மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இதற்காக, அஜித்தின் குடும்பம், திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
பல சவால்களைக் கடந்து கார் ரேஸில் தான் புரிந்த இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியும் தெரிவித்தார். மேலும், ‘அஜித் வாழ்க, விஜய் வாழ்க’ என்று சொல்லாமல் எல்லோரும் தங்களுக்காக வாழ வேண்டும்’ என்றும் கல்ஃப் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியிலும் தெரிவித்தார். இந்த நிலையில், துபாயில் கார் ரேஸ் நடந்த இடத்தில் அஜித்தைப் பார்க்க ரசிகர்கள் கூடியிருந்தனர். அப்போது ஒருவர் அஜித் தலை மீது கைவைத்து முடியை கலைக்க கடுப்பான அஜித் அந்த ரசிகர் கையைத் தட்டி விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருக்கிறது.