சென்னை: 'விடாமுயற்சி’ படத்தின் கதை குறித்து இயக்குநர் மகிழ்திருமேனி பகிர்ந்திருக்கிறார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் இந்த மாதம் 23ஆம் தேதிக்கு ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இந்தப் படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான ‘ஸ்வதீகா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் ஹிட்டானது.
பிரபல ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ என்பதன் ரீமேக் இது என்பது உறுதியான நிலையில் படத்தின் உரிமையைப் பெறவும் அந்த ஹாலிவுட் படக்குழுவின் அனுமதிக்காகவும் ‘விடாமுயற்சி’ படக்குழு காத்திருக்கிறது. இந்த நிலையில், படத்தின் ஒன்லைன் பற்றி இயக்குநர் மகிழ்திருமேனி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில், ‘சோர்வில்லாமல் தொடர் முயற்சிகள் செய்யும் ஒருவனுடைய கதைதான் ‘விடாமுயற்சி’ படம். அஜித் கதாபாத்திரத்தில் பல லேயர்கள் இருக்கு. கதையுடன் உறவுகள் தொடர்பான விஷயமும் இருக்கிறது. இதை எல்லாம் காப்பாற்றும் மனிதன் நடத்தும் விஷயங்கள்தான் இது” என்றார்.