கண்ணீருடன் இருந்தேன் - ‘மதகஜராஜா’ படத்தின் வெற்றி குறித்து இயக்குநர் சுந்தர்.சி!


சென்னை: 'மதகஜராஜா’ படத்தின் வெற்றி குறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த ‘மதகஜராஜா’ படம் இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருந்தது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் வெளியாகாமல் இருந்த இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகி இருக்கிறது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுகுறித்து சுந்தர்.சி நெகிழ்ச்சியாக ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துள்ளார்.

அவர் பேசியிருப்பதாவது, “போன கும்பமேளாவுக்கு இந்த படம் வந்திருக்க வேண்டியது. ஆனால், 12 வருஷங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆகியிருக்கிறது. படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பார்த்து கண்ணீருடன் இருக்கிறேன். பொங்கலுக்கு வந்திருக்கும் எல்லாப் படங்களும் வெற்றியடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

x