‘விஜய் 69’ பாலகிருஷ்ணா படத்தின் ரீமேக்?


விஜய் நடிக்கும் அவரது 69 படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதில் விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மமிதா பைஜு, பாபி தியோல், டீஜே அருணாச்சலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வந்தது. அது உண்மைதான் என்பதை நடிகர் விடிவி கணேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கியுள்ள ‘சங்கராந்திக்கு வஸ்துனம்` என்ற படத்தில் நடித்துள்ள விடிவி கணேஷ், அதன் புரமோஷன் நிகழ்ச்சியின்போது இதைத் தெரிவித்தார். அந்தப் படத்தை விஜய் 5 முறை பார்த்தார் என்றும் அதைத் தமிழில் ரீமேக் செய்ய அனில் ரவிபுடியை, விஜய் கேட்டார் என்றும் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்ட அனில் ரவிபுடி, “விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான், அவர் நல்ல மனிதர். அவர் இப்போது நடிக்கும் படம் ரீமேக்கா இல்லையா என்பதை அந்தப் படக்குழுவினர் அறிவிப்பார்கள்” என்றார்.

x