கார் ரேஸில் அஜித் புரிந்த சாதனைக்கு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்த்து செய்தியை தெரிவித்திருக்கிறார்.
துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் நடிகர் அஜித் குமாரின் அணி 911 GT3 R என்ற பிரிவில் மூன்றாவது இடம் வந்துள்ளனர். மேலும், gt4 என்ற பிரிவில் ’ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது. அஜித்தின் இந்த வெற்றியை அவரது மனைவி ஷாலினி மற்றும் குடும்பம் மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. இந்த காணொளி இணையத்தில் வைரலானது.
இதுமட்டுமல்லாது, நடிகர்கள் மாதவன், சிவகார்த்திகேயன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் வாழ்த்துத் தெரிவிக்க அஜித் ரசிகர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் அஜித்தின் இந்த வெற்றிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். அதில், ‘எனது அன்பான அஜித்துக்கு வாழ்த்துகள்! நீங்கள் சாதித்து விட்டீர்கள்! கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும், லவ் யூ!’ என ட்வீட் செய்திருக்கிறார்.
Congratulations my dear #AjithKumar. You made it. God bless. Love you.#AKRacing
— Rajinikanth (@rajinikanth) January 13, 2025