சென்னை: ’விடாமுயற்சி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘விடாமுயற்சி’. முதலில் பொங்கல் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இந்தப் படம் பின்பு தள்ளிப்போனது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதம் ஜனவரி 23 ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.