நடிகை கமலா காமேஷ் குறித்து பரவிய வதந்தி; முற்றுப்புள்ளி வைத்த குடும்பத்தினர்!


பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் இறந்ததாக செய்தி பரவிய நிலையில் அது குறித்து குடும்பத்தினர் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

’குடிசை’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘சம்சாரம் அது மின்சாரம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை கமலா காமேஷ். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். இவரது மகள் உமாவும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில், 72 வயதாகும் கமலா காமேஷ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு காலமானதாக செய்தி பரவியது.

ஆனால், இதுவெறும் வதந்தி என்றும் கமலா காமேஷ் நலமுடன் இருக்கிறார் என்றும் இந்த தவறான தகவலுக்கு அவரது மகள் உமா ரியாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மாறாக, உமாவின் கணவர் ரியாஸின் அம்மாதான் காலமாகி இருக்கிறார் என்ற தகவலையும் அவர் சொல்லியிருக்கிறார். ரியாஸின் அம்மா ரஷீதா பானுவுக்கு வயது 72. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் காலமானார் என சொல்லியிருக்கிறார் உமா ரியாஸ்.

x