மும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் நடிகை ஸ்ருதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18 ஆவது சீசனில் நடிகை ஸ்ருதிகா கலந்து கொண்டார். ஃபைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாரத்தின் மிட் வீக் எவிக்ஷனில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இது எதிர்பாராத ஒன்று என ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஸ்ருதிகா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நம் ஊரில் மட்டுமல்லாது, அமெரிக்காவில் இருந்தும் கூட எனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா, என்னை கஷ்டப்பட்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தார். டைட்டில் வெல்ல வேண்டும் என்று நினைத்தேன். என்னால் முடிந்த வரை சிறப்பாகவே விளையாடினேன். ஆனால், எதோ ஒரு இடத்தில் மிஸ் ஆகிவிட்டது.
நிகழ்ச்சியில் நான் அழுததை பார்த்து நிறையபேர் அழுதிருக்கிறீர்கள். உங்களை அழ வைத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் ஆதரவுதான் எனக்கு பெரிய நம்பிக்கை. அனைவருக்கும் நன்றி” என உருக்கமாகப் பேசியிருக்கிறார்.