நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக் எடுக்க வேண்டும்; விருப்பம் தெரிவித்த ஷங்கர்!


சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பயோபிக் எடுக்க வேண்டும் என தன்னுடைய விருப்பத்தை இயக்குநர் ஷங்கர் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிப்பில் ‘கேம்சேஞ்சர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக ஊடகங்களுக்கு ஷங்கர் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், தன்னுடைய அடுத்தடுத்தப் படங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அவர் பேசியிருப்பதாவது, “’கேம் சேஞ்சர்’ படத்தில் பிஸியாக இருந்ததால் ‘இந்தியன்3’ பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருக்கிறது. அதனால், ‘கேம் சேஞ்சர்’ முடிந்ததும் ‘இந்தியன்3’ மற்றும் ‘வேள்பாரி’ படங்களில் கவனம் செலுத்த உள்ளேன்” என்றார். அவரிடம் யாருடைய பயோபிக் எடுக்க விருப்பம் உள்ளது என கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இதுவரை பயோபிக் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. எடுத்தால் ரஜினிகாந்தின் வாழ்க்கையை எடுப்பேன். அவரது வாழ்க்கை அனைவருக்கும் இன்ஸ்பிரேஷன்” எனக் கூறியிருக்கிறார்.

x