மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்ட பிக்பாஸ் போட்டியாளர்; ரசிகர்கள் அதிர்ச்சி!


மும்பை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மிட் வீக் எவிக்‌ஷனாக ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18 ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகாவும் பங்கேற்றார். தமிழில் நடிகர் சூர்யாவுடன் ‘ஸ்ரீ’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'குக் வித் கோமாளி’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.

இதனை அடுத்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கும் தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். சமீபத்தில் ஸ்ருதிகாவின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இறுதிக்கட்டத்திற்கு ஸ்ருதிகா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த வாரம் நடந்த மிட் வீக் எவிக்‌ஷனில் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதனால், அதிர்ச்சியான ஸ்ருதிகா ரசிகர்கள் இது 'Unfair eviction' என இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x