சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ’புஷ்பா 2’. வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது.
32 நாளில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி உலகளவில் ரூ.1831 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ.1438 கோடி வசூல் செய்து ‘பாகுபலி 2’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இந்நிலையில், ‘புஷ்பா 2’ படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே 3.20 மணி நேரப் படமான இது, இயக்குநர் சுகுமார் பிறந்த நாளான வரும் 17-ம் தேதி முதல் மேலும் 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3.40 மணி நேர படமாக வெளியாக இருக்கிறது.