ஆஸ்கர் விருது விழா மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதுக்குத் தகுதியானதாக 323 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்காகப் போட்டியிடும் 207 படங்களில், 7 இந்திய படங்களும் இடம் பிடித்துள்ளன.
‘கங்குவா’ (தமிழ்), ‘ஆடுஜீவிதம்’ (மலையாளம்), ‘சந்தோஷ்’ (இந்தி), ‘ஸ்வதந்ரிய வீர் சாவர்கர்’ (இந்தி), ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (மலையாளம் - இந்தி), ‘கேர்ஸ் வில் பி கேர்ள்ஸ்’ (இந்தி- ஆங்கிலம்), புதுல் (வங்காளம்) ஆகிய இந்திய படங்கள் இடம் பிடித்துள்ளன.
சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான ‘கங்குவா’, கடுமையான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ரூ.350 கோடியில் உருவான இந்தப் படம், ரூ.100 கோடி மட்டுமே வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பாக்ஸ் ஆபிஸில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.